பாகுபலி படப்பிடிப்பின்போது பிரபாஸை கன்னத்தில் அறைந்த சத்யராஜ்!

Sasikala| Last Modified திங்கள், 22 மே 2017 (16:41 IST)
பாகுபலி படம் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக சமீபத்தில் வந்து கொண்டிருக்கிறது. அவை ஆச்சரியம் கொடுப்பதாகவே  உள்ளது. அதிலும் சத்யராஜ், பிரபாஸ் குறித்து வெளிவந்துள்ள தகவல் படு ஆச்சரியப்பட வைக்கிறது.

 
கதைப்படி பாகுபலியின் காலை எடுத்து சத்யராஜ் தலையில் வைத்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை பரபாஸிடம் இயக்குனர் சொல்லவில்லையாம். சத்யராஜும் சொல்லவில்லையாம். அந்த சீன் எடுக்கும்போது சத்யராஜ் பாகுபலி என்று  உணர்ச்சி பொங்க கத்தியபடி பிரபாஸின் வலது கால்களை எடுத்து தலையில் வைத்தார். ஆடி போன ஹீரோ, பட்டென்று  காலை உதறி விட்டு நடுங்க ஆரபித்துவிட்டார்.
 
கதைக்கு இது அவசியம் என எவ்வளவு கூறியும் முடியவே முடியாது என்று கூறி விட்டாராம். ப்ளார் என்று ஒரு அறை  விட்டாராம் சத்யராஜ். நடிப்பு என்று வந்துவிட்டால் பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்க்க கூடாது என்று புரிய வைத்தாராம் சத்யாராஜ். அதன் பின் நீண்ட யோசனைக்கு பின் கால் வைக்க ஒத்துகொண்டாராம் பிரபாஸ்.


இதில் மேலும் படிக்கவும் :