1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:04 IST)

ஒரு பேங்க் எம்ப்ளாயி அக்கவுண்ட்டில் இவ்வளவு பணமா? கவனம் ஈர்த்த ‘லக்கி பாஸ்கர்’ டீசர்!

தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். அவர் கணக்கில் நம்ப முடியாத அளவுக்கு பணம் இருக்க, அது எப்படி சாத்தியம் என்பதை கேட்டு வியக்கிறது ஒரு குரல். அடுத்தடுத்து வங்கி மற்றும் பணம் சம்மந்தப்பட்ட ஷாட்கள் விறுவிறுப்பாக நகர்கின்றன. இந்த டீசர் ரசிகர்களுக்குள் ஒரு ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.