பாலசந்தரின் கனவை படமாக்கும் சமுத்திரகனி
பாலசந்தரின் கனவை படமாக்கும் சமுத்திரகனி
இயக்குனர், நடிகர் சமுத்திரகனியின் குரு பாலசந்தர். தனது குருவின் கனவுப் படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கவிருப்பதாக சமுத்திரகனி கூறியுள்ளார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த பாலசந்தர், குழந்தைகளை மையப்படுத்தி ஒரு ஸ்கிரிப்டை எழுதினார். அதில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், உதவி இயக்குனராக பணிபுரிவதாகவும் இருந்தது. படத்தை தொடங்க திட்டமிட்ட நேரத்தில்தான் பாலசந்தரின் மகன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். மகனின் பிரிவால் மனதளவில் சோர்ந்துபோன பாலசந்தர் அந்த ஸ்கிரிப்டை கடைசிவரை இயக்கவில்லை.
தனது குருவின் கனவு படத்தை எடுக்க சமுத்திரகனி முன்வந்துள்ளார். பாலசந்தர் விரும்பியது போல் அவர் கேட்டுக்கொண்ட வேடத்தில் நடிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்கிறார். குருவின் ஸ்கிரிப்டுடன் ஏதாவது தயாரிப்பாளரை தேடிப்போய் படமாக்குங்கள் என்று கேட்பதை அவமானம் என நினைக்கும் சமுத்திரகனி, தானே படத்தை தயாரிப்பது என்றும் முடிவு செய்துள்ளார்.
தன்மான சிஷ்யன்.