செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (20:28 IST)

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்’ திரைப்படத்திற்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

don movie
சிவகார்த்திகேயன் நடித்த 'டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 'டான்’ திரைப்படத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)”  என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!