செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 மே 2021 (23:40 IST)

நமக்கு வராது என்ற சிந்தனை வேண்டாம்- பிக்பாஸ் பிரபலம்

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:  கொரோனா தொற்றை முறியடிக்க மக்கள் அனைவரும் அக்கறையோடு முயல்வதே தீர்வு.. என்னதான் அரசும் அரசுத்துறைகளும் முயன்றாலும் தனி மனித சிந்தனையில் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான முன்னேற்பாடு இல்லாதவரை கொரானா ஆபத்துகளை கடப்பது கடினம்.

நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம் அத்தியாவசிய தேவைகளுக்கான தொழில் செய்பவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவத்துறை, போக்குவரத்து துறையில் பணிபுரிவோர், காவல்துறை, செய்திதுறை.. இவர்கள் எல்லாம் நம் பாதுகாப்புக்காக களத்தில் நிற்கிறார்கள்.. அவர்களுக்கும் குடும்பம் உறவுகள் இருக்கிறார்கள்..

இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை இந்த சிரமத்திற்கு ஆளாக்க போகிறோம். ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்துவிடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் வராமல் தடுக்க முழுமுயற்சி எடுங்கள் எனத்தெரிவித்துள்ளார்.