திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:04 IST)

விஜய் பட நடிகைக்கு புதிய பட வாய்ப்பில்லை..ஏன் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே. இவர். தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானார்.

அதன்பின்னர், ரங்கஸ்தளம், சாக்ஷியம், ராதேஷ்யாம், சர்க்கஸ், விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், புதிய படங்களில் பூஜா ஹெக்டே நடிக்காமல் இருக்க அவரது உடல் நிலைதான் காரணம் என கூறப்படுகிறது. பூஜா ஹெக்டேவின் காலில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக மீடியாவில் தகவல் வெளியாகின்றன.

பிரபாஸுடன் இவர்  இணைந்து நடித்த ராதேஷ்யாம் படத்தின்போது பூஜா ஹக்டேவின் காலில் வலி ஏற்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரையின்படி, அவர் காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகவும் தற்போது ஓய்வில் இருப்பதால் புதிய படங்களில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகிறது.