ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:28 IST)

விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு தையல் போட்ட மருத்துவர்கள்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்ட சிறுவனுக்கு அவருக்கு பிடித்த நடிகரான விஜய்யின் பிகில் திரைப்படத்தை காட்டி தையல் போட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சசிவர்ஷன் என்ற சிறுவன் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்துள்ளார். இதனால் நெற்றியில் அவருக்கு பலமானக் காயம் பட்டது. அதனால் அவருக்கு தையல் போடவேண்டிய சூழல் உருவானது. ஆனால் சிறுவனோ வலியில் தையல் போட அனுமதிக்காமல் அடம்பிடித்துள்ளான்.

அப்போது அவனுக்குப் பிடித்த நடிகரான விஜய்யின் பிகில் படத்தை செல்போனில் போட்டுக்காட்டவும், அதைப் பார்க்க ஆரம்பித்துள்ளான். அப்போது அவருக்கு தையல் போட்டு முடித்துள்ளனர்.