1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:06 IST)

தியேட்டர் திறந்தாலும் டாக்டர் ரிலீஸ் அப்டேட் வரலையே… இதுதான் காரணமாம்!

டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றி எந்த அறிவிப்பையும் தயாரிப்புத் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடவில்லை.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்குக் காரணம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்புக் குழு அஞ்சுவதே காரணம் என சொல்லப்படுகிறது. படத்தை ரிலிஸ் செய்தால் என்ன விதமான வசூல் இருக்கும் என சந்தேகத்தில் உள்ளதால் பட ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
Source வலைப்பேச்சு