1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:12 IST)

சிம்புவைப் போல் நீங்களும் ஏமாற்றிவிடாதீர்கள் ஜெய்; பலூன் இயக்குனர்

பலூன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை படத்தின் ஹீரோவான ஜெய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சினிஷ் சூட்சமமாக தெரிவித்துள்ளார்.
சினிஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பலூன். இத்திரைப்படம் சென்ற வாரம் வெளியாகிய நிலையில் படத்தின் இயக்குனர் சினிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சயான கருத்தை பதிவிட்டுள்ளார்.
 
பலூன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியாக இல்லை. மேலும் சமீபத்தில் இயக்குனர் ஒருவர்(AAA திரைப்படம்) தனது படம் நஷ்டப்பட்டதற்கான காரணம் படத்தில் நடித்த ஹீரோ தான்(சிம்பு) என்றும் ஆனால் அதனைப்பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டை வைத்தார். பலூன் திரைப்படம் குறிப்பிட்ட ஒருவரால் நீண்ட நாட்களாக தள்ளிபோனது என மறைமுகமாக நடிகர் ஜெய்யை தாக்கி பேசியுள்ளார். எனவே நடிகர் சிம்புவைப்போல் செய்யாமல் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும்படி நடிகர் ஜெய்க்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் சினிஷ்.