திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன் பேச்சு!

Sasikala| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (14:51 IST)
உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

 
கூட்டத்துக்குப் பின்னர், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியது, அதிமுக இப்போது இரண்டாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்  அணிகளாகப் பிரிந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டுமே அதிமுகதான். எனவே, யாருக்கும் பின்பக்கமாக ஆதரவு  தெரிவிப்பது இல்லை. தீர்ப்பு குறித்து...: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் சொல்ல முடியும் என்றார்.
 
இன்று சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் 4 வாரத்திற்குள் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பை அளித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்தத் தீர்ப்பைப் பற்றி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில்  'உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைக்கு ஆட்சியமைக்கும் எண்ணம்  திமுக-வுக்கு இல்லை. தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது' என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :