ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 11 மார்ச் 2023 (14:43 IST)

சொகுசு கார் வாங்கிய DJ Black - பிரியங்கா, மகாபாவுக்கு வெயிட்டான ட்ரீட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான  ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு DJ பிளாக் தான் பிள்ளையார் சுழி. அவரால் தான் அந்த நிகழ்ச்சி 50% TRP எகிறும். அந்த அளவுக்கு சார் இல்லையேல் விஜய் டிவி இல்லை. 
 
என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் நடுவராக இருந்தாலும், தொகுப்பாளராக இருந்தாலும் எல்லோரையும் கலாய்த்து தள்ளிடுவார். அவரிடம் அதிகம் அடி வாங்கியவர் பிரியங்கா. அப்படித்தான் போட்டியாளராக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூப்பர் சிங்கர் பூஜா, மற்றும் ரோஜா ஸ்ரீ உள்ளிட்ட பெண்களிடம் ரொமான்டிக் கிளிப் போட்டு தன் மனதில் பட்டத்தை வெளிப்படுத்தி வேற லெவலில் பேமஸ் ஆனார். 
 
வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த இவர் அரசு பள்ளியில் தான் படித்தார்.  அரசு மாணவர்களுக்கு கொடுத்த இலவச லேப்டாப் மூலம் தனது கேரியரை துவங்கி திறமையால் இன்று பெரும் புகழ் பெற்று சொந்த உழைப்பில் சொகுசு கார் வாங்கியுள்ளார். அதனை கொண்டாட பிரியங்கா , மகாகாபா மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் சென்றுள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: