1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (11:40 IST)

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கும் விழா நேற்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 
 
விழாவில் பேசிய விஷால், தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்புப் பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்புப் பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. 
 
இந்த நிலத்தின் மீது இருந்த அனைத்துக் கடனையும் அடைத்தாகி விட்டது. நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள், எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். 
 
நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்துத் தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம் என்றார்.