1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (19:21 IST)

இயக்குனர் விக்ரம் குமாருக்கு செப்டம்பர்-4 திருமணம்: காதலியை மணக்கிறார்

தமிழில் யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமாருக்கு வரும் செப்டம்பர் 4 திருமணம் நடக்கிறது. தனது காதலி ஸ்ரீநிதியை அவர் திருமணம் செய்கிறார்.


 

 
ஸ்ரீநிதி ரஹ்மானிடம் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிகிறவர். 24 படத்துக்கு ரஹ்மான்தான் இசை. அப்போது ரஹ்மான் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்த விக்ரம் குமாருக்கு ஸ்ரீநிதியுடன் நட்பு ஏற்பட்டது. படம் வெளியான போது அது காதலாக மலர்ந்து, இப்போது திருமணத்தில் முடிய உள்ளது.
 
இருவீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 4 -ஆம் தேதி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் இவர்களின் திருமணம் நடக்கிறது. 
 
புதுமணத் தம்பதிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.