செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (21:33 IST)

ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு இரும்பு பெண் - "தலைவி" குறித்து இயக்குனர் விஜய்!

தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய இயக்குனர் விஜய்...
 
இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது,  சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன்.  எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த் சாமி அவர்கள் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய  உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார். 
 
ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்குவகுகித்துள்ளனர். பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமுத்திரகனி அவர்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி. 
 
இணை தயாரிப்பாளர்கள் திருமல், ரித்தேஷ், சைலாஷ் அவர்களுக்கு நன்றி. நான்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார். எடை கூடுதல், குறைப்பது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.