தமிழ்நாடா? தமிழகமா?... இயக்குனர் வெற்றிமாறனின் பதில்!
கடந்த சில நாட்களாக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகம் என்று சொன்னதற்கு எதிர்வினைகள் அதிகமாக உள்ளன.
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்ததற்கு கடுமையான சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இது சம்மந்தமான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் பத்திரிக்கையாளர்களிடம் கேட்ட போது “கண்டிப்பா தமிழ்நாடுதான்” என பதிலளித்துள்ளார்.