செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (16:31 IST)

சிறு வயது ரஜினியாக நடித்த சூர்யா கிரண் காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி

suriya kiran
பிரபல இயக்குநர் சூர்யா  கிரண் இன்று மாரடைப்பால் காலமானார்.
 
நடிகரும் இயக்குனருமான சூர்யா  கிரண் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42 ஆகும்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படிக்காதவன் என்ற படத்தில் சிறு வயது ரஜினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்  மாஸ்டர் சுரேஷ்.
 
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
இவர் சூர்யா  கிரண் என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமாகி, சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜூ பாய் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
 
இந்த  நிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு  ஏற்பட்டு  இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தனம் என்ற கேரக்டரில் நடித்த சுஜிதா தனுஷின் சகோதரர்தான் சூர்யா கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.