1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (12:29 IST)

தமிழின் அற்புதமான இயக்குனர் ருத்ரய்யா மறைந்தார்

தமிழின் ஆகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களில் வரக்கூடிய திரைப்படம் அவள் அப்படிதான். அதனை இயக்கிய மதிப்புக்குரிய இயக்குனர் ருத்ரய்யா. அவர் சென்னையில் காலமானார். 
 
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் போக்கை எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மாற்றியமைத்த இயக்குனர்களில் ருத்ரய்யா முக்கியமானவர். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கிய அவள் அப்படிதான் முக்கியமான படைப்பு. ஆனால் படம் வெளியான நேரம், வழக்கமான கமல், ரஜினியை எதிர்பார்த்தவர்களுக்கு படம் ஏமாற்றமளித்ததால் தோல்வி அடைந்தது. ஆனால் இன்றளவும் அப்படத்தின் புகழ் மங்காமலுள்ளது.
 
அவர் புதுமுகங்களை வைத்து இயக்கிய கிராமத்து அத்தியாயம் மிகச்சிறந்த படம். புதுமுகங்கள் நடித்ததால் அவள் அப்படிதான் அளவுக்குக்கூட கிராமத்து அத்தியாயம் பேசப்படவில்லை. ஆனால் அதன் பாதிப்பும் இன்றளவும் தொடர்கிறது.
 
ஒரு நல்ல படைப்பாளியை தமிழகம் கொண்டாட தவறியதால் அவரால் அதிக படங்கள் இயக்க முடியவில்லை. தமிழ் சினிமாவுக்கும், தமிழகத்துக்கும் அது பேரிழப்பு. 
 
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ருத்ரய்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணமடைந்தார். நாளை  அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.