வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

'ராட்சசன்' கதை ரகசியத்தை சொன்ன ராம்குமார்

சமீபத்தில் வெளியான ராட்சசன் படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, ‘முண்டாசுப்பட்டி பட இயக்கனர் ராம்குமார் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் ஜோடியாக நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில்  நடந்தது, 
 
படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் பேசுகையில், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் என நான்கு படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க.. இந்த வெற்றி படங்கள் லிஸ்டில் எங்கள் படமும் இருக்குறது மகிழ்ச்சியா இருக்கு. என்றார். 
 
இயக்குனர் ராம்குமார் பேசும் போது, ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு சைக்கோவின் கதை தான், ராட்சன் படக்கதை. இந்த படத்தில் சைக்கோ கேரக்டரில் சரவணன் என்பவர் நடித்துள்ளார், அவரை எல்லாரும் பாராட்டுறாங்க. கூடிய விரைவில் அவரை மக்கள் முன் அறிமுகப்படுத்துவோம் என்றார்