ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (16:53 IST)

ஒரு வழியாக தயாரான இயக்குனர்… தனுஷிடம் தேதி இருக்குமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் படத்துக்கான திரைக்கதை வேலைகளை இயக்குனர் ராம்குமார் முடித்துள்ளார்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், திரைக்கதையை அமெரிக்காவில் இருக்கும் தனுஷுக்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால் இப்போது ஏகப்பட்ட படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் எப்படி ராம்குமார் படத்துக்கு தேதிகள் கொடுப்பது என குழப்பத்தில் உள்ளாராம்.