வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (07:11 IST)

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் பதின் பருச இளைஞர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.. படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது.  படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்தி வேல் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பார்த்திபன், படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவப்ரசாத் மேல் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில் “சிவப்ரசாத், படத்தின் கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதத்துக்குள் முடித்துத் தருகிறேன் எனக் கூறி பணம் வாங்கினார். ஆனால் சொன்ன தேதியில் பணிகளை முடிக்காமல் இழுத்தடித்ததுடன் என்னிடம் மேலும் பணம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினார்” என அந்த புகாரில் கூறியுள்ளார்.