சத்யராஜ் நடித்த ஹிட் படத்தின் ரீமேக்கில் விஜய்யா? பி வாசுவின் மாஸ்டர் ப்ளான்!

Last Modified திங்கள், 23 நவம்பர் 2020 (11:33 IST)

நடிகர் விஜய்யை வைத்து நடிகன் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் பி வாசு.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இப்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சனின் பெயர் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை இயக்கப்போகும் யார் என்ற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குனரான பி வாசு நீண்டகாலமாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். 1990 ஆம் வருடம் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி மற்றும் மனோரமா ஆகியோரை வைத்து அவர் இயக்கிய நடிகன் படத்தை ரீமேக் செய்து அதில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இதற்கான சம்மதம் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :