1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (11:07 IST)

நெல்சனுக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #Doctor !!

தனது பிறந்தாளை கொண்டாடும் நெல்சனுக்கு சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

 
கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தற்போது, நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி முடித்து அடுத்து விஜய்யுடன் தளபதி 65 படத்தை இயக்கி வருகிறார். 
 
இன்று தனது பிறந்தாளை கொண்டாடும் நெல்சனுக்கு சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ், டார்டர் படத்தின் தயாரிப்பு குழு தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் பல சினிமா பிரபலங்களும் மக்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் காரணமாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Doctor என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. 
 
2010 ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் உருவான "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். ஆனால் இந்த படம் திடீரென சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்.