1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (09:04 IST)

முதல் படம் வெற்றி அடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்: மிஷ்கின்

முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும் என்றும் இரண்டாவது படத்தில் உலகையே மாற்ற வேண்டும் என்று எண்ணுவார்கள் என்றும் நானும் அது போல் தான் இருந்தேன் என்றும் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார் 
 
ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான செல்பி என்ற திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது முதல் படம் வெற்றி அடைந்துவிட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும் என்றும் நானும் அப்படித்தான் இருந்தேன் என்றும் கூறினார்
 
 உதவி இயக்குனர்கள் கிசுகிசு பேசுவதை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்றும் அப்போது தான் அவர்கள் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்றும் கூறினார் 
 
இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் உள்ள நல்லவை பற்றி மட்டுமே பேசுவார், சந்திப்பார் என்றும் அதனால் தான் அவர் இந்த இடத்தில் வந்து உள்ளார் என்றும் கூறினார் மிஷ்கினின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது