Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையான பிரபல இயக்குனர்


Cauveri Manickam (Abi)| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (10:20 IST)
பிரபல இயக்குனரான மகேந்திரன், உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

 
பல அற்புதமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தவர் மகேந்திரன். அட்லீ இயக்கிய ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
ப்ரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக மலையாள நடிகை நமிதா ப்ரமோத் நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில்தான், உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கப் போகிறார் மகேந்திரன். தற்போது தென்காசி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அங்கு படப்பிடிப்பை முடிக்கும் ப்ரியதர்ஷன், அடுத்ததாக மதுரை மற்றும் தேனி பகுதிகளில் முக்கியக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :