Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லிங்குசாமிக்கு தரமறுத்த சேரன்


cauveri manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:49 IST)
ஒரு படத்தின் தலைப்பைத் தான் கேட்டபோது, சேரன் தர மறுத்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
 
 

மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா நடிப்பில் வெளியான படம் ‘ஆனந்தம்’. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமியின் முதல் படம் இது. இந்தப் படத்துக்கு, ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தார் லிங்குசாமி. ஏனெனில், ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்பது அவர்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்.
 
ஆனால், ஆர்.பி.செளத்ரி அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளரான பிறகு, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று பெயரை மாற்றினர். அந்த தலைப்பை பதிவுசெய்யச் சென்றால், ஏற்கெனவே அதை இயக்குநர் சேரன் பதிவுசெய்து வைத்திருந்தார். அவரிடம் தலைப்பைத் தருமாறு லிங்குசாமி கேட்டபோது, அவர் தரமறுத்து விட்டாராம். இதனால், அந்தப் பெயரில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் கொண்டு, ‘ஆனந்தம்’ எனப் பெயர் வைத்தார் லிங்குசாமி.
 
இப்போது இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா? லிங்குசாமி முதன்முதலாக வைக்க எண்ணிய ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :