1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (09:57 IST)

பார்களை திறக்கும் போது ஏன் மருத்துவர்கள் கடிதம் எழுதவில்லை – இயக்குனர் கேள்வி!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் ஒருவர் நடிகர் விஜய்க்கும் சிம்புவுக்கும் எழுதிய கடிதம் கவனம் பெற்றது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ் சினிமா நடிகர்களான விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தனர். அதையடுத்து தமிழக அரசும் அதற்கு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூடப்பட்ட ஒரு அரங்கில் முழு அளவில் இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிப்பது கொரோனா மீண்டும் வேகமாக பரவ வழிவகுக்கும் என கூறினர்.

இது சம்மந்தமாக ஒரு மருத்துவர் நடிகர்கள் சிம்பு  மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த மருத்துவரை தாக்கி இயக்குனர் டிகே டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘மருத்துவர்கள் ஏசி வசதி உள்ள பார்களை திறக்கும் போது ஏன் இதுமாதிரி பதிவுகளை எழுதவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சினிமாவை தாக்கினால் கிடைக்கும் 15 நிமிட புகழ் பெறுவது சுலபம் என அனைவரும் நினைக்கின்றனர்’ எனக் கூறியுள்ளார்.