திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:39 IST)

கொச்சைப்படுத்தியவர்கள் மத்தியில் அவதாரமெடுத்த பாலா! ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் விசித்திர படைப்புகளுக்கு பெயர்போன இயக்குனர் பாலா பல்வேறு மெகாஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இலக்கணத்தை மாற்றி அமைத்தது மட்டுமின்றி தனக்கான ஒரு தனி இடத்தையும் தக்கவைத்துக்கொண்டார். 
 

 
இவர் இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைக்கும் அதேநேரத்தில் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத வகையில் படம் ஆரம்பித்த நாளில் இருந்தே பஞ்சாயத்துகளும் துவங்கிவிடும். 
 
அப்படித்தான் சமீபத்தில் இவர் இயக்கிய வர்மா படம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுபாட்டால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாலா அடுத்து வேறு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். 

இப்படத்தில் பரதேசி, நாச்சியார் போன்ற படங்களில் இயக்குனர் பாலாவுடன் பணிபுரிந்துள்ள  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இப்படத்தில் நடிகர் சூர்யா  ஹீரோவாக நடிக்கக்கூடும் என்ற செய்தி இணையத்தில் பேசப்பட்டுவருகிறது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என பரவலாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் சூர்யா ஏற்கனவே இயக்குனர் பாலா இயக்கத்தில் " பிதாமகன்" படத்தில் விசித்திரமாக நடித்து மெகாஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.