ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (10:49 IST)

இறைவன் மிகப்பெரியவன் பட தயாரிப்பாளர் விவகாரம்.. விசாரணைக்கு தயார் என இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ!

இயக்குனர் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இப்போது தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் திமுகவிலும் அயலக அணியில் பொறுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து காஃபி ஷாப் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த இயக்குனர் அமீர் மீது இது சம்மந்தமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் விளக்க அறிக்கையையும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மேலும் விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “மது, விபச்சாரம் மற்றும் வட்டிக்குவிடுதல் ஆகியவற்றுக்கு எதிரான மார்க்கத்தில் வாழ்பவன் நான். சில ஊடகங்களிலும் என் மீது பேரன்பு கொண்ட நண்பர்களும் சிலர் என் மீது விமர்சனங்களை வைத்துள்ளனர். இதன்மூலம் என்னையும் என் குடும்பத்தையும் மட்டுமே நீங்கள் காயப்படுத்த முடியும். போலீஸார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் விசாரணைக்கு செல்ல தயாராகவே இருக்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” எனக் கூறியுள்ளார்.