1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (10:52 IST)

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் இயக்குனர் அமீர்… புதிதாக இரண்டு படங்கள்!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் அமீர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இப்போதைக்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதால் அந்த படங்களை முடித்து விட்டுதான் தாணுவுக்கு தேதிகள் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாம். இந்த படத்துக்கு கலைமகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படம் அவரின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்ப்போடு உள்ளாராம். இதுபோல வாடிவாசல் படத்திலும் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.