“ரஜினிக்கு மாமனராக நடிக்க கூப்பிட்டார்கள்…” திண்டுக்கல் ஐ லியோனி பகிர்ந்த தகவல்!
பட்டிமன்ற நடுவரும் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் இவர் அருண்விஜய், வடிவேலு நடித்த கங்கா கௌரி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த வொரு படத்திலும் நடிக்காமல் இருந்த லியோனி, இப்போது 25 ஆண்டுகள் கழித்து யோகி பாபு நடிக்கும் பன்னி குட்டி படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லியோனி “கங்கா கௌரி படத்துக்குப் பின்னர் பல படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அரசு வேலையில் இருந்ததால் நடிக்க வில்லை. சிவாஜி படத்துக்கு ரஜினிக்கு மாமனராக நடிக்க அழைத்தார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பன்னிக்குட்டி படத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.