புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (16:20 IST)

திடீரென ரஜினியை காமெடியனாக்கிய தினமலர்!

ரஜினி அரசியல் வருகையை ஆரவாரமாக வரவேற்ற நாளிதழ்களில் தினமலரும் ஒன்று.

நடிகர் ரஜினிகாந்த் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதற்காக முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் டிசம்பர் மாதம் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்ப்புகள் பல விதமாக எழுந்த நிலையில் அவரை ஆதரித்து வந்தது தினமலர் நாளிதழ். ஆனால் நேற்று திடீரென தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். அதற்கு தனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ரஜினியின் உண்மையான ரசிகர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால் இத்தனை நாட்களாக அவரை மெச்சிய தினமலர் நாளிதழ் அவரை இங்கிலீஷ்காரன் படத்தில் வடிவேலு செய்யும் காமெடி காட்சி ஒன்றோடு ஒப்பிட்டு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.