Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கலாபவன் மணி மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு?


cauveri manickam| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (15:48 IST)
பிரபல நடிகை வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பிற்கு, கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பிருக்கலாம் என அவருடைய சகோதரர் சந்தேகப்படுகிறார்.
 

 

நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதாகியுள்ளார் மலையாள நடிகர் திலீப். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் அண்ணனின் மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.

கடந்த வருடம் மர்மமான முறையில் பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார் கலாபவன் மணி. விஷம் குடித்து இறந்ததாக அவருடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னதால், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் கொடுத்து யாராவது கொன்றார்களா எனத் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், “திலீப்பும், என் அண்ணனும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்தது. தற்போது  நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதால், என் அண்ணனின் மரணத்திலும் திலீப் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்” எனப் புகார் கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணா. இந்தப் புகாரை, சிபிஐ விசாரிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :