1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:35 IST)

தில் ராஜு தயாரிப்பில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் ஹீரோ!

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்து தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் என்பவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தனுஷ் தற்போது சேகர் கமுலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.