ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் டிக்கிலோனா!
சந்தானம் நடித்த டிக்கிலோனா காமெடி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
சந்தானம் ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடிக்கு விற்கப்பட்டது. அதன்படி இன்று ஜீ5 ஓடிடியில் டிக்கிலோனா படம் தற்போது வெளியாகியுள்ளது.