வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 15 மே 2017 (15:23 IST)

டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டாரா ரஜினி?

‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அதன் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.


 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்த வருடம்தான் படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.
 
ஆனால், அதற்குள் தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஜினி. இன்று முதல் 5 நாட்களுக்கு ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி. பிறகு, பா.இரஞ்சித்தின் படம் தொடங்கப் போகிறது. எனவே தான், டப்பிங்கை சீக்கிரமாகவே முடித்துக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். ‘கபாலி’ படத்துக்குப் பேசியதைப் போலவே ஜெட் வேகத்தில் பேசி முடித்துவிட்டாராம்.