வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:36 IST)

துருவ நட்சத்திரம் படத்தின் மீது இவ்வளவு கோடி ரூபாய் கடன் உள்ளதா?

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தின் வியாபாரம் எதுவும் இதுவரை ஆகவில்லை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் டிரைலர் வெளியான நிலையில் இனிமேல்தான் ஓடிடி சேட்டிலைட் வியாபாரம் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மேல் கடனாக 50 கோடி ரூபாய் வரை உள்ளதாகவும் அதை ரிலீஸூக்கு முன்னர் அடைத்தால்தான் பிரச்சனை இல்லாமல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதற்கான பணிகளில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனன் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.