வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (16:18 IST)

ஐபிஎல்லுக்கு பின் பாலிவுட்டில் சினிமா… தோனியின் புது ஐடியா!

சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட்டர் தோனி அடுத்து படத் தயாரிப்பில் ஈடுபட போவதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவார் என நம்பப்படுகிறது. இதையடுத்து அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்த உள்ளாராம். ஆனால் நடிகராக இல்லையாம்.

தயாரிப்பாளராக களமிறங்க உள்ளாராம். முதல் படமாக தனது மனைவியோடு இணைந்து டைம்பிக்‌ஷன் கதை ஒன்றை தயாரிக்க உள்ளாராம். ஏற்கனவே தோனியின் வாழக்கை வரலாற்று படம் பாலிவுட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.