வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (19:17 IST)

தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்.. முக்கிய அறிவிப்பு!

Dhoni
பிரபல கிரிக்கெட் வீரர் தமிழ் திரைப்படம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை நண்பர்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி சமீபத்தில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தோனி நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் தமிழ் திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தோனி நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva