1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (15:18 IST)

ஹேக் செய்யப்பட்ட தனுஷ் பட நிறுவனத்தின் யுடியூப் பக்கம்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் யுடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரித்து வருகிறார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் படத்தயாரிப்பை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வுண்டார்பார் நிறுவனத்தின் யுடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சில மணி நேரங்களில் அந்த பக்கம் மீண்டும் பெறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.