திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (15:16 IST)

ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியான தனுஷின் வாத்தி திரைப்பட போஸ்டர்!

தனுஷ் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வெளியாக உள்ளது வாத்தி திரைப்படம். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக் உள்ளது.

ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் ரிலீஸ் தேதியான டிசம்பர் 2 ஆம் தேதி தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால், போதுமான அளவுக்கு வாத்தி படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் நிலவுகிறதாம். அதனால் வாத்தி படம் ரிலீஸ் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரிலும் ரிலீஸ் தேதி விவரம் இல்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.