இந்தியாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் தனுஷ் முதலிடம்!
இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2 வது இடத்தில், ஆர்.ஆர்.ஆர் பட நடிகையும், சமீபத்தில் ரன்பீர் கபூரை திருமணம் செய்தவருமான ஆலியா பட் உள்ளார். 3 வது இடத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும், 5 வது இடத்தில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவும் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜூன் 9 வது இடத்திலும், கேஜிஎஃப் நடிகர் யஷ் 10 வது இடத்தில் உள்ளனர்.
Edited By Sinoj