Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெற்றி நடிகனாக தனுஷின் ரகசியம் என்ன தெரியுமா?


cauveri manickam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (13:46 IST)
வெற்றி நடிகனாகத் தான் இருப்பதற்கான ரகசியம் என்னவென்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

 

‘ஃபஹிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். ‘நீங்கள் ஹிந்திப் படத்தில் நடிக்கிறீர்கள். பாலிவுட் நடிகையான கஜோலுக்கு, ‘விஐபி 2’ இரண்டாவது தமிழ்ப் படம். ஒரு மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் நடிப்பதில் நடிகர்களுக்குத் தடை இருக்குமா?’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

“உண்மையை சொல்லப்போனால், பேசும் மொழி நடிப்புக்குத் தடை கிடையாது. ஆனால், நடிப்பு மொழி, அதாவது உடல் மொழி என்பது கடினமானது. ஒரு நடிகனாக என்னுடைய ரகசியம் மிக எளிமையானது. அமைதியாக இருந்து இயக்குநர் சொல்வதைக் கவனிப்பது. நான் படம் இயக்கியபோது, ஒரு காட்சியைப் பற்றி அதில் நடித்த நடிகர்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அவர்களுடன் உரையாடுவேன். நான் நினைத்ததைவிட அவர்களின் எண்ணம் சிறப்பாக இருந்தால், அதை ஏற்றுக் கொள்வேன்” என்று அந்தக் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் தனுஷ்.


இதில் மேலும் படிக்கவும் :