1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (08:15 IST)

பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகும் தனுஷின் மகன் யாத்ரா!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ராயன் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “ஸ்பேரோ” பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இந்த பாடலில் பிரியங்கா மோகன் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளாராம். இதை எஸ் ஜே சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அவரை வாழ்த்தியுள்ளார்.