விஷாலுடன் கைகோர்த்த தனுஷ்

Last Modified வியாழன், 30 நவம்பர் 2017 (08:35 IST)
கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலுக்கு எதிரான சரத்குமார் அணிக்கு ஆதரவு கொடுத்த தனுஷ், தற்போது விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

ஆம், விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாட சம்மதம் தெரிவித்துள்ளார். விஷாலின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெறும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்ய தனுஷ் பாடவுள்ளதாகவும், இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொழில் போட்டியாளரான சிம்பு இசையமைக்கும் பாடலை வெளியிடுவது, விஷாலுக்காக பாடுவது என தனுஷிடம் தற்போது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன


webdunia

இதில் மேலும் படிக்கவும் :