Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியிடம் சம்பாதித்து ஹாலிவுட் படத்தை தயாரிக்கும் தனுஷ்


sivalingam| Last Modified வியாழன், 27 ஜூலை 2017 (22:59 IST)
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் முத்திரை பதித்த தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கோலிவுட் படங்களின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் 'விஐபி 2' படத்தின் மூலம் அவர் தற்போது பாலிவுட் படத்தையும் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.


 
 
இந்த நிலையில் ஹாலிவுட் படத்தில் நடித்ததை அடுத்து ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். ஹாலிவுட்டில் குறைந்தது ரூ.500 கோடி, ரூ.1000 கோடி பட்ஜெட்டில்தான் படமெடுப்பார்கள். அந்த அளவுக்கு தனுஷிடம் பணம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் தனுஷ் தற்போது தயாரித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தின் லாபத்தை கணக்கு போட்டு வருகிறாராம். இந்த படம் 'கபாலி' மாதிரி ஓடினால் நிச்சயம் ஹாலிவுட் படத்தை தயாரிக்கும் அளவுக்கு தனக்கு தகுதி கிடைத்துவிடும் என்று அவர் நம்புகிறாராம். அவரது நம்பிக்கை பலிக்க நமது வாழ்த்துக்கள்


இதில் மேலும் படிக்கவும் :