ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (15:25 IST)

தனுஷின் "பட்டாஸ் " ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இயக்கம் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
இந்நிலையில் தற்போது இப்படம் வருகிற 2020 ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறி அதிகாரபூர்வமாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது , "எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான்.  உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. வரும் ஜனவரி மாதம்  தனுஷ்  நடிப்பில் வெளிவரும் "பட்டாஸ்"  ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.
 
இப்படம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.
 
தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. "பட்டாஸ் ' எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்களும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை "பட்டாஸ் "மீண்டும் நிரூபிக்கும்" என அதில் கூறியுள்ளனர்.