செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (18:52 IST)

ரஜினியை முந்திய தனுஷ்

ட்விட்டரில் 6 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் தனுஷ்.


 
 
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகள் கொண்டவர் தனுஷ். அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானபோது, கிண்டல் செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர் தனுஷ்.
 
தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள தனுஷ், 60 லட்சம் ஃபாலோயர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கே 43 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.