செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:16 IST)

மின்னல் வேகத்தில் செல்லும் தனுஷ் – கர்ணன் படத்தின் அப்டேட் !

தனுஷ் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிய இருப்பதாக நடிகர் லால் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் என்ற படத்தில் கலைப்புணி தாணுவோடி கூட்டணி சேர்ந்துள்ளார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்ட போது அந்த ஸ்டில்லுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷுடன் மலையாள நடிகர் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் படம் குறித்த முக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது டிவிட்டரில் ‘இயக்குனர் மாரி செல்வராஜ் அபாரமாக வேலை செய்துவருகிறார். தனுஷும் படத்துக்காக உந்துதல் அளித்து வருகிறார். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைய உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.