வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 6 அக்டோபர் 2014 (12:14 IST)

சூதாடிக்குப் பிறகு காஜல் அகர்வாலுடன் இணையும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூதாடி படத்தில் நடிக்கும் தனுஷ் அப்படம் முடிந்த பிறகு பாலாஜி மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார்.
காதலில் சொதப்புவது எப்படி, வாய் மூடிப் பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் அடுத்து தனுஷிடம் கதை சொல்லி அவரது சம்மதத்தை வாங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடமும் கால்ஷீட் வாங்கியுள்ளனர். தனுஷ் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கவிருப்பது இதுவே முதல்முறை.
வெற்றிமாறனின் சூதாடி படத்துக்கு முன் பாலாஜி மோகனின் படம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறனின் சூதாடிக்குப் பிறகே பாலாஜி மோகனின் படம் தொடங்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.