ஜகமே தந்திரம் கதைசுருக்கம் இதுதான்… வெளியான தகவல்!
ஜகமே தந்திரம் படத்தின் கதையை பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதைச்சுருக்கம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் மதுரையில் இருக்கும் சின்ன ரௌடியான சுருளி, இங்கிலாந்தில் இரு கேங்ஸ்டர் தரப்புகளுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஒரு தரப்புக்காக அழைக்கப்படுகிறார். அங்கு செல்லும் சுருளி எதிரிகளை அழித்தாரா? யார் உண்மையான வில்லன்? என்பதே கதையாம்.